கோவை : அதிமுக-அமமுக ஒன்றிணைந்து சசிக்கலா தலைமையில் டிடிவி தினகரன் வழி நடத்தலில் இயங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி விளாங்குறிஞ்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தலைமை சரியில்லாமல் போனது தான் காரணம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பொதுமக்கள் அதிமுக.,வை விரும்பாமல் வாக்களித்து உள்ளனர். அமமுக அதிமுக இணைந்து சசிகலா தலைமையில் டிடிவி வழிகாட்டுதலில் செயல்பட்டால் தான் அதிமுக மீளும். இரண்டு கட்சிகளிலும் இருக்கின்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க என்னை கேட்டுகொள்ளததால் நான் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தேன்.
அதிமுக-அமுமுக பிரிந்து இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்று விட்டது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக ஆட்சியில் இருந்த போதே நடத்தி இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் வென்றிருக்கும்.
முன்னதாகவே தேர்தலை நடத்தி இருந்தால் வென்றிருக்கலாம் என பல அதிமுக கவுன்சிலர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். எனவே இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம். என்னை யாரும் வற்புறுத்தி பேச வைக்கவில்லை. இவ்வாறு ஆறுக்குட்டி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.