கொரோனா தடுப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ ஆலோசனை : அரசு அதிகாரிகள் பங்கேற்பு!!

18 May 2021, 7:52 pm
Admk Mla - Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் படுக்கை பற்றாக்குறையை போக்க அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Views: - 57

0

0