உங்களுடைய பிரச்சனைய சொல்லுங்க : தொகுதிக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 12:52 pm
Amman Arjunan - Updatenews360
Quick Share

கோவை : கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 10 இடங்களையும் கைப்பற்றியது. அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தனது சட்டமன்றத்திற்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் உள்ள மருதம் நகர், பெரியார் நகர் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

அப்போது அம்மன் அர்ஜூனன் மக்கள் மத்தியில் பேசியதாவது: எங்கள் கட்சியின் ஆணிவேர் பெரியார் தான். அந்த வகையில்தான் இன்று பெரியார் நகரில் இருந்து குறைதீர்க்கும் பணியை துவங்குகிறோம். உங்கள் தொகுதியில் எந்த பிரச்சினை என்றாலும் உடனடியாக என்னிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அடுத்த நிமிடம் நான் இந்த இடத்தில் வந்து நிற்பேன்.

மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதன் வழியிலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் புறநகர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 163

0

0