ரத்தினபுரியில் நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக., எம்.எல்.ஏ

3 July 2021, 8:50 pm
Quick Share

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுன் அங்கிருந்த ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்தாலும் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த வருகிறது. ஊரடங்கில் கோவைக்கு மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உத்தரவின்பேரில் கோவை மாவட்ட அதிமுக சார்பில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று ரத்தினபுரி பகுதியில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் சுமார் 500 குடும்பங்களுக்கு அரசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதனை தொடர்ந்து ரத்தினபுரி ரேஷன் கடைக்கு சென்ற அவர், அங்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, தரமான ரேஷன் பொருட்களை வழங்க அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 90

0

0