கோவையில் டெண்டர்கள் தடையால் மக்கள் அவதி : ஆதாரங்களை சமர்பித்து அதிமுக எம்எல்ஏக்கள் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 8:26 pm
Admk Complaint -Updatenews360
Quick Share

கோவை: அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் பணி உத்தரவு கொடுத்த பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும் இதற்கான ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி ஆணையாளரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார்,தாமோதரன் ஆகியோர் சந்தித்து அதிமுக ஆட்சியில் விடப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட டெண்டர் ஆதாரங்களை அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் அதிமுக ஆட்சியில் விடுவிக்கபட்டட டெண்டர்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் கோவை மாநகாரட்சி பகுதிகளில் அடிப்படை வசதி பணிகளுக்காக 31 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் மதிபில் 119 ஒப்பந்த பணிகள் கோரப்பட்டடு 500 க்கும் மேற்பட்ட பணிகளை தற்போதைய அரசு நீக்கியிருப்பதால் , அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாகவும், பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிபடுவதாகவும் எனவே டெண்டர்களை அறிவித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Views: - 181

0

0