வரலாற்றில் அதிமுகவிற்கு இன்று முக்கியமான நாள் : புதியதாக உதயமான வழிகாட்டுதல் குழு!!

Author: Udayachandran
7 October 2020, 10:31 am
ADMK - updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பின் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிவித்தார். இதையடுத்து அதிமுகவில் புதியதா வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக முதலமைச்சர் வேட்பளாராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். இதையடுத்து அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர் பின்வருமாறு

*திண்டுக்கல் சீனிவாசன்
*தங்கமணி
*எஸ்.பி வேலுமணி
*ஜெயக்குமார்
*சி.வி. சண்முகம்
*காமராஜ்
*ஜேசிடி பிரபாகர் ( முன்னாள் எம்எல்ஏ)
*மனோஜ் பாண்டியன்
*பா.மோகன் (முன்னாள் அமைச்சர்)
*ரா.கோபால் கிருஷ்ணன் (முன்னாள் எம்பி)
*கி. மாணிக்கம்

Views: - 48

0

0