சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது அதிமுக அரசு : முதலமைச்சர் பேச்சு!!

23 January 2021, 2:55 pm
cbe edappadi- Updatenews360
Quick Share

கோவை : சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது அதிமுக அரசு என்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பினருடான கலந்தாய்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக போத்தனூர் பகுதியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினருடன் கலந்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் பேசியதாவது: ஒவ்வொரு மதமும் புனிதமானது. இந்திய தேசியத்தில் தமிழ்நாடு அமைதியான பூமியாக உள்ளது. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

ஹஜ் பயணத்திற்கான நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி உள்ளோம். மதத்தை பாதுகாப்பதில் சிறிய அளவில் கூட நாங்கள் தவற மாட்டோம். என்னை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. பதவி என்பது தோளில் போடும் துண்டு போலத்தான்.

ஜெயலலிதா இறந்த பிறகு எவ்வளவு சோதனைகளைத் தாண்டி நாங்கள் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ரமலான் பக்ரீத் பண்டிகைக்கு அருமையான பிரியாணி செய்து எனக்கு அனுப்புவார்கள் அப்படி எனக்கு வரும் உணவை பகிர்ந்து உண்பவன்.

தமிழ்நாட்டில் வீடு இல்லாத எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். எத்தனை கோடி ஆனாலும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவது உறுதி.
மதம் சாதிக்கு அப்பாற்பட்டு செயல்படுவது அதிமுக அரசு சிறுபான்மையினருக்கான அரணாக இருக்கிறது இந்த அரசு.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Views: - 8

0

0