மறைமுகத் தேர்தலில் அதிமுக வெற்றி : ஒன்றியத் தலைவர் ராதாமணிக்கு சால்வை அணிவித்து பாராட்டிய எஸ்.பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2021, 7:32 pm
SP Velumani Apprecoate - Updatenews360
Quick Share

கோவை : புதிய ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராதாமணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான ஊரட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 11 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ராதாமணி வெற்றி பெற்றார். தொடர்ந்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் கோவை மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகைக்குச் சென்ற அவர் அங்கு எம்.எல்.ஏ.க்களிடம் வாழ்த்துக்களை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி புதிய ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ராதாமணிக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Views: - 426

0

0