சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவக்கம் : பலத்த காற்றிலும் பயணிகள் வருகை!!
26 November 2020, 7:51 amசென்னையில் விமான சேவை மீண்டும் இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது.
நிவர் புயல் நேற்று கரையை கடக்க ள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹீப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே அதி தீவிர புயலாக மாறிய நிவர், இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் விமான சேவை இன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.
தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது. காலை 6 மணி முதல் அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். தற்போது காற்று வீசுவதால் விமான போக்குவரத்து 9 மணிக்கு தொடங்கப்பட் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0