திருச்சி TO இலங்கை இடையே விமானம்: மீண்டும் சேவையை தொடங்கியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!!

Author: Aarthi Sivakumar
3 September 2021, 10:30 am
Quick Share

திருச்சி: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளதால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன்றன. ஆனால் திருச்சியில் இருந்து இலங்கைக்கு நீண்ட நாட்களாக விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கி உள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் திருச்சியில் இருந்து இலங்கைக்கு விமான சேவை தொடக்கம்

வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்புவில் இருந்து புறப்பட்டு காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு 24 பயணிகள் வந்தனர்.

மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 11.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் திருச்சியிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு 96 பயணிகள் பயணம் செய்தனர்.

Views: - 340

0

0