அஜித் ரசிகர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் ப்ளூ சட்டை மாறன்.. வைரலாகும் பதிவு.!

Author: Rajesh
5 June 2022, 11:13 am
Quick Share

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் யூட்யூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பற்றி விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதை வேலையாக வைத்திருப்பார். இதற்கு பல கண்டனங்களும் வருவதுண்டு. ஆனால் அவரோ அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எதையாவது பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

சமீப காலங்களாக அஜித் படங்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். இதனால், ட்டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் கண்டனங்களை பதிவிட்டு வருகிறன்றனர்.

அந்த வகையில் நெட்சர் ஒருவர: ‘ உங்கள் “Anti Indian”படம் எங்கள் திரையில் 2 ஷோ தான் ஓடுச்சு அதிலும் 2 ஷோ வையும் சேர்த்து மொத்தமாக 17 பேர் பார்த்தனர் . பின் வேறு படத்தை மாற்றினோம். அண்ணாச்சி படம் உங்கள் படம் அளவிற்கு இருக்காது என்று நம்புகிறோம்.” என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த Blue sattai மாறன், அண்ணாச்சி படத்தின் ட்ரெய்லர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாகவும், நேர்கொண்ட பார்வை படம் 19 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட்டு அஜித் ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்

Views: - 562

0

0