அந்த விஷயத்தில் இருந்து முற்றிலும் விலகிய அஜித்..? எதற்கு தெரியுமா..?

Author: Rajesh
11 May 2022, 11:23 am
Quick Share

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் வலிமை. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தர தவறியது. மேலும், இந்த படத்திற்கு முன்னர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படம் ஓர் ரிமேக் திரைப்படம் ஆகும். வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒன்லைன் என கூறப்படுகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பை பெற தவறியது. இதனால் அடுத்த படத்தை எப்படியவாவது ஹிட்டாக கொடுக்க வேண்டும் என முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறாராம் அஜித் மற்றும் இயக்குனர் வினேத். மேலும், இந்த படத்தின் கதையில், எந்த தொந்தரவும் தலையீடு இருக்காது என்று அஜித் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த படம் முழுக்க முழுக்க வினோத் படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு திரையிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதனால் நேரம் காலம் பார்க்காமல் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறாராம் இயக்குனர் வினோத். அஜித்தும் இரவு 2 மணி ஆனாலும் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு தான் செல்கிறாராம். அந்தளவுக்கு தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறதாம் படக்குழு.
இப்படி பார்க்கும் போது, இந்த படம் எப்படியும் தரமானதாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த படத்தின் படத்தின் தலைப்பு எப்போது வரும், பட ஷூட்டிங் எப்போது முடியும் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Views: - 520

0

0