விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் பெயரில் உணவு விநியோகம்… சூப்பர் காம்பினேஷனில் அசத்திய ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
6 August 2022, 12:28 pm
Quick Share

கோவை : நடிகர் அஜித் திரையுலகிற்குள் வந்து 30 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் சார்பில், கோவையில் உள்ள விஜய் விலையில்லா விருந்தகத்தில், அஜித் பெயரில் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். அவர் தற்போது, சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளாகி விட்டது. இதையொட்டி, சமூகவலைதளங்களில்

30YearsofAjithism மற்றும் #3decadeofAjithism உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

30 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த நடிகர் அஜித்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் இயங்கி வரும் விஜய் விலையில்லா விருந்தகத்தில், அஜித் பெயரில் இலவச உணவு வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அஜித்தை கொண்டாடும் வகையில், அடங்காத அஜித் குரூப்ஸ் ரசிகர்கள் இதனை ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

நடிகர் விஜய் – அஜித் ரசிகர்கள் எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதுதான் வழக்கம். ஆனால், அஜித்தின் சிறப்பான தினத்தை கொண்டாடும் அவரது ரசிகர்களுடன் விஜய் ரசிகர்களும் இணைந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 131

0

0

Leave a Reply