துப்பாக்கி சுடும் போட்டியில் Gold Medal வாங்கிய தல அஜித் ! வைரலாகும் புகைப்படங்கள் !

7 March 2021, 6:29 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித், தல நடிப்பு தவிர்த்து தனித் திறமைகள் அதிகமாகக் கொண்டவர். பைக் ரேஸ், கார் ரேஸ் என மோகம் கொண்டவர். அதில் புதிய மாடல் பைக் மற்றும் கார்கள் எது வந்தாலும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பது தான் அவரின் முதல் வேலை. தற்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் போன்றவற்றின் பயன்களைப் பற்றி கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்திகொண்டிருந்த அஜித் கடந்த இரண்டு வருடங்களாக திடீரென்று பிஸ்டல் ஷூட்டிங் மீது பிரியம் கொண்டு அங்கேயும் நான்தான் பில்லா என்று மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

ஒரு விஷயம் Boss ! சினிமா ஷூட்டிங்னாலும் தல கிங், பிஸ்டல் ஷூட்டிங்னாலும் தல கிங் என்று அஜித் ரசிகர்கள் தலையை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட, தற்போது அந்த போட்டியில் 10m பிஸ்டல் பிரிவில் பங்குகொண்டு வெற்றி பெற்று அடுத்த ரவுண்டுக்கு முன்னேறி இருக்கிறார். இதனால் அஜித்துக்கு Gold Medal கொடுத்து கெளரவ படுத்தி இருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் செம்ம வைரல். இந்த தகவலை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த பெருமையில் இருக்கிறார்கள்.

Views: - 415

2

0