விரைவில் AK61 டைட்டில், First Look?.. தேதியுடன் வெளியான லேட்டஸ்ட் தகவல் !

Author: Rajesh
6 July 2022, 4:20 pm
Quick Share

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள நடிகர் அஜித்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அந்த வகையில், 3 AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இதனிடையே தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி AK61 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 13. நடிகர் அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிகம் மரியாதை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 103

0

1