மது அருந்துவதில் தகராறு: தலையில் கல்லைப் போட்டு ரவுடி கொலை…!

Author: kavin kumar
13 January 2022, 1:59 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரவுடி ஒருவர் கல்லால் தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முருகேசன் நகர் காட்டு பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் விகாஸ் நகர் பகுதியைச் சார்ந்தவர் லூயிஸ் பைட் என்பவரது மகன் அலெக்ஸ் (31) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் நகர் காட்டுப்பகுதிக்கு இவரை அழைத்து வந்த மர்ம நபர்கள் இவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் மர்மநபர்கள் அலெக்ஸின் பின் தலையில் கல்லால் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரூரல் எஸ்பி சந்தீஸ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 274

0

0