மதுபோதையில் தகராறு : கணவன் தாக்கப்படுவதை தடுக்க சென்ற மனைவி அடித்து கொலை.. 6 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 2:44 pm
Lady Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே மதுபோதையில் இருவருக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 50) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 41) என்பவருக்கும் சேம்பரில் வேலை செய்வதில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததது.

இந்த நிலையில் நேற்று இரவு காரனை பெரிச்சானூர் கூட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் வாய்த்தகறாறு ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பாக மாறியது.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானபடுத்தி அனுப்பி உள்ளனர். பின்னர், வீட்டிற்கு சென்ற நிலையில், நள்ளிரவில் மது போதையில் இருந்த மாணிக்கம் தனது மனைவி பூங்காவனம், மகன் மணிகண்டன் மற்றும் மாணிக்கத்தின் சகோதரர் முருகன், அவரது மனைவி அஞ்சலை மற்றும் மகன் அஞ்சாமணி ஆகியோரை அழைத்து கொண்டு 6 பேரும், நாராயணன் வீட்டிற்கு வந்து அவரை தாக்கி உள்ளனர்.

கணவரை அடிப்பதைக் கண்டு அதனை தடுக்க வந்த நாராயணன் மனைவியை லட்சுமி (வயது 37), மாணிக்கம் குடும்பத்தினர் தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கண்டாச்சிபுரம் போலீசார் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணிக்கத்தின் சகோதரர் முருகனை பிடித்து காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 169

0

0