நாளை அனைத்துக் கட்சி கூட்டம் : கொரோனா குறித்து முக்கிய முடிவு எடுக்க முதலமைச்சர் அழைப்பு!!

12 May 2021, 7:40 pm
Stalin invite - Updatenews360
Quick Share

கொரோனா தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு பணி தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்களுடன் மேலும் ஒருவர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 116

0

0