கொரோனா குறையவில்லை, அதற்காக ஊரடங்கு தேவையில்லாதது : தலைமைச் செயலாளர் சண்முகம்…

8 November 2020, 3:12 pm
Shanmugam - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா சவாலான சூழ்நிலையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுபாட்டு முயற்சிகளின் பயனால் தற்போது 220 என் குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்டதில், கட்டுப்பாட்டு பகுதிகள் குறைக்கப்பட்டு 33 பகுதிகள் மட்டும் உள்ளது என்றும், பாதிக்கப்பட்ட தெருக்களும் வெகுவாக குறைந்துள்ளன. எந்த தொய்வும் இல்லாமல் ஆய்வை தொடர வேண்டும், தனிமை படுத்துதலையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தனிமை படுத்துதலை மீறுபவர்களை மருத்துவமனை தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் மாநகர பகுதிகளில் குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களிலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் வருகின்றனர்.

கோவையின் ஐந்து மண்டலங்களும் சென்சிடிவ், குறிப்பாக காரமடை,சூலூர்,தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகள் தொடர்ந்து ஹாட்ஸ்பாட்டாக இருந்து வருகின்றன. சில பகுதிகளில் சந்தைகளின் மூலம் தொற்று ஏற்படுகிறது, அந்த பகுதிகளில் சானிடைசர் உபயோகம் மற்றும் மாஸ்க் போன்றவற்றை கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் பரவல் அதிகம் உள்ளது, மாநிலத்தில் பாசிட்டிவ் ரேட் 3 சதமாக உள்ளது. கோவை போன்ற பகுதிகளில் இன்னும் 5 சதமாக உள்ளது.எனவே சோதனையை அதிக படுத்த வேண்டும் என்றார்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் வருகிறது. இதெல்லாம் சவாலான ஒன்று தான் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் நோய் பரவல் குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என கூறினார்.

Views: - 27

0

0