பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் அல்வா வழங்கும் போராட்டம்

Author: kavin kumar
2 February 2022, 2:31 pm

புதுச்சேரி : மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்து புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கானது என்றும், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்தும்,

புதுச்சேரி மின்துறையை தனியர் மயமாக்க முயற்சித்து வரும் என். ஆர் காங்கிரஸ் – பாஜக அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை – அண்ணா சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அவ்வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!