இரண்டாவது திருமணம் யாருடன்.? மறுமணம் குறித்து நடிகை அமலா பால் சொன்ன பதில்.?

Author: Rajesh
4 July 2022, 10:00 am
Quick Share

மலையாள நடிகையான அமலா பால், கடந்த 2010-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு, இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால், அவர் மீது காதல் வயப்பட்டார்.

இதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தற்போது நடிகை அமலா பால் கைவசம் ஆடுஜீவிதம் என்கிற மலையாள படமும், கடாவர் என்கிற தமிழ் படமும் உள்ளது.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமலாபால், “உண்மையா சொல்லனும்னா நான் இன்னும் அதை கண்டுபிடிக்கவில்லை. தற்போது நான் சுய புரிதலுக்கான பயணத்தில் உள்ளேன். நான் கண்டுபிடித்தபின் உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.

Views: - 275

4

1