கொரோனா உருவத்தில் பூத்திருக்கும் அதிசய மலர் : கண்டு ரசித்து கொஞ்சும் கொடைக்கானல் மக்கள்!!

3 July 2021, 2:41 pm
Corona Flower - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா உருவம் போன்ற மலர் பூத்துள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் கொரோனா மலர் பூத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால் இந்த கொரோனா உருவம் கொண்ட இந்த மலரை பார்த்தவுடன் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா உருவம் போன்ற இந்த மலர் பச்சை நிறத்தில் மலர்ந்துள்ளது. இந்த மலர் கொரோனாவை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 120

0

0