மதுரையில் கம்யூனிஸ்ட் எம்.பி நடத்திய மறியலால் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம் : எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் கைது!!

2 December 2020, 12:27 pm
Madurai MP Arrest - Updatenews360
Quick Share

மதுரை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மதுரை மீனாட்சிபஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற சு.வெங்கடேசன் உள்ளிட்டோரை போலிசார் கைது செய்தனர்.

மறியலின் போது மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அழைத்து சென்றனர்.

உணவை கார்ப்பரேட்டுகளிடம் விற்பனை செய்யும் மத்திய அரசுக்கு எதிரான தேச மீட்பு போராட்டம் இது என செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

Views: - 0

0

0