வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா (25) கடந்த 2015 மே 24-ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, அவரை மீட்கக் கோரி பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம் 2015 ஜூன் 15-ஆம் தேதி பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 6 போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், விசாரணைக்குப் பின் ஷமீல் அகமது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை என மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.கலவரத்தில் திருப்பம்: 2015 ஜூன் 27-ஆம் தேதி இரவு 7 மணியளவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு, போலீசாரைக் கைது செய்யக் கோரி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் தொடர்புடைய 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு, 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.நீதிமன்ற தீர்ப்பு: இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு, எஸ்.பி.க்கள் சியாமளாதேவி (திருப்பத்தூர்) மற்றும் மயில்வாகனன் (வேலூர்) தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் குவிக்கப்பட்டனர். ஆனால், நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதி மீனாகுமாரி அளித்த தீர்ப்பில், 22 பேருக்கு 3 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.