நவம்பர் 21’ஆம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

15 November 2020, 5:05 pm
amit_shah_aiims-1598699862_updatenews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா வரும் நவம்பர் 21’ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளதால் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அவர் தமிழகம் வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்துடன் சேர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த வாரம் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொண்ட அமித் ஷா, அங்கு கட்சிப் பணிகள் மற்றும் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

இந்நிலையில் இதே காரணங்களுக்காக அவர் தமிழகம் வர உள்ளதாகக் கூறப்படுகிறது. வேல் யாத்திரை அதிமுக அரசின் தடையை மீறி பாஜகவால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

வேல் யாத்திரை விவகாரத்தில் அதிமுக அரசின் மீது பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியுடன் இருந்தாலும், தமிழகத்தில் இதே கூட்டணி நீடிக்கும் என்றே பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமித் ஷா வருகையின் போது, கூட்டணி தொடர்பான விவகாரங்கள் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகளை பாஜக தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 23

0

0

1 thought on “நவம்பர் 21’ஆம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Comments are closed.