ஏழையின் நல்வாழ்வுக்கு பேருதவியாக இருந்த அம்மா கிளினிக்கை மீண்டும் திறக்க வேண்டும் : பெண்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2022, 2:23 pm
கன்னியாகுமரி : முதன் முதலாக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் அம்மா மினி கிளிணிக்கை மீண்டும் திறக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ சிகிச்சைக்காக பொதுமக்கள் நெடுந்தூரம் பயணம் செய்வதை தடுக்கும் வகையிலும் ஏழைகளுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும் வகையிலும் தரமான மருந்துகளுடன் கூடிய அம்மா மினி கிளினிக் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் தொடங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்த நிலையில் அம்மா மினி கிளினிக்கிற்க்கு பொதுமக்கள் வருவதில்லை என்ற பொய்யான தகவல்களை கூறி அம்மா மினி கிளினிக்கை தற்போதைய திமுக அரசு மூடியது.
இந்நிலையில் அப்போதைய தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் முயற்சியின் பலனாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முதலாக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.
திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக காட்டுப்புதூர் கிராமத்தில் அம்மா மினி கிளிணிக்கை மூடியது மீண்டும் .திறக்க பொதுமக்கள் அதிகம் பலன் பெற்று வந்த அம்மா மினி கிளினிக்கை மீண்டும் திறக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த அம்மா மினி கிளினிக்கை பயன்பாட்டில் இல்லை எனக் கூறியும், பொதுமக்கள் வருவது இல்லை என்ற பொய்யான தகவல்களை கூறி அரசு மூடி உள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப்புதூர் , கடுக்கரை பெருந்தலை காடு ,திடல், இரத்தினபுரம் காற்றாடி வின ஆலடி உள்ளிட்ட 15 கிராம மக்கள் பயன்படுத்தி வந்த அம்மா மினி கிளினிக்கை மீண்டும் உடனடியாக திறக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
1
0