சசிகலாவோடு அமமுகவையும் ஒதுக்குறோம்…100 சதவீதம் வாய்ப்பே இல்லை : அமைச்சர் ஜெயகுமார் சரவெடி..!!

3 February 2021, 4:15 pm
Quick Share

சென்னை : சசிகலாவை போல அமமுகவையும் அதிமுகவுடன் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது. முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது, 2வது கட்ட பணிகள் நடப்பதால், இடையூறு ஏற்படாமல் இருக்க, பொதுமுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட அமமுக, அதிமுகவை கைப்பற்ற நினைப்பதை எந்தத் தொண்டனும் ஏற்க மாட்டான். முதலமைச்சர் பழனிசாமி கூறியதை போல, அதிமுக – அமமுக இணைய 100 % வாய்ப்பில்லை. அமமுக தங்களிடம் இருந்த 3 சதவீத ஓட்டையும் இழந்து நிற்கிறது.

அதிமுக.,வில் உறுப்பினரே அல்லாத தினகரன், சசிகலா எப்படி அதிமுகவை உரிமை கோர முடியும்?. தமிழகத்தில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும். எதிர்க்கட்சியாக இருப்பதற்கே திமுக.,விற்கு தகுதியில்லை. எம்எல்ஏ.,க்கள் மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்து சொல்கிறாரா என்று தான் மக்கள் பார்ப்பார்கள், எனக் கூறினார்.

Views: - 0

0

0