அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை: பல்வேறு கோணங்களில் விசாரணை

13 July 2021, 8:33 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: மணலூர்ப்பேட்டை அருகே அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஜிபி.தாங்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கோவிந்தன் என்பவர் இன்று தமது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாசுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, கோவிந்தன் தமது விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து உறவினர்கள் மணலூர்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார்,

கோவிந்தனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு வந்த திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், ஆய்வாளர் பாபு விசாரணையை தீவிரபடுத்தினர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர். இறந்த கோவிந்தன் அமமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 115

0

0