முழு கொள்ளளவை எட்டும் அமராவதி அணை : கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
3 September 2020, 9:26 amAMARAVATHY DAM
அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றபடலாம் என்பதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தளிஞ்சி, மூணாறு மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றபடலாம் என கூறப்படுகிறது. இதனால், அமராவதி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0
0