தாய் தந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் திருமணம் செய்த 18 வயது பள்ளி மாணவி : காவல்துறையிடம் தஞ்சம்.. கதறும் பெற்றோர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2021, 12:43 pm
Major Marriage -Updatenews360
Quick Share

நாமக்கல் : 18 வயது பூர்த்தியானதும் காதலனை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகள் பவதாரணி (வயது 18) இவரும் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது25) என்பவரும் 3 வருடமாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 18 வயது பூர்த்தியானதும் மணியை பவதாரிணி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் இன்று போலீசார் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி , கணவர் மணியுடன் தான் செல்வேன் என கூறினார். இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார்.

இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முயற்பட்டனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் பச்சியப்பன், சிந்தாமணி ஆகிய இருவரும் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டு போராடினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே காதல் ஜோடியை மற்றொரு வாகனத்தில் ஏற்றி, போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் பவதாரணியின் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Views: - 435

0

0