கோவையில் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்க திட்டம் : பள்ளி திறக்கப்படுவதால் முடிவு!!

27 September 2020, 11:05 am
Bus - Updatenews360
Quick Share

கோவை : பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கோவையில் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 1ம் தேதி முதல் 10, 11இ 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன மேலும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வருகிற 1-ந்தேதி முதல் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

எனவே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ மாணவிகள் தங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று வர வசதியாக கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக சார்பில் கோவையில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் கூடுதலாக 300 பேருந்துகள் டவுன் பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் உள்ளே ஏழாம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் தற்போது 287 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது.

எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக 300 டவுன் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், பேருந்துகள் நன்றாக பராமரிக்கப்பட்டு பரிசோதனை செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேருந்துகள் இயக்க கூடிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தயாராக உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை இருப்பினும் மாணவ மாணவிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் காண்பித்தால் போதுமானது.

மேலும் மாணவர்கள் சீருடையில் இருந்த அவரிடம் டிக்கெட் கட்டணம் கேட்கக்கூடாது என்று கண்டக்டர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீருடை இல்லாத மாணவ மாணவிகள் தங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் அங்கு படிப்பதற்கான சான்றிதழ் பெற்றிருந்தால் போதுமானது எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு செல்ல இலவச பஸ் பாஸ் பயணம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்துறை அதிகாரியிடம் எந்த ஊருக்கு பஸ்கள் தேவை என்று கேட்டு உள்ளோம் தேவைப்பட்டால் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.