மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படகூடாது என கரூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கரூருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். அவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-வருகிற 17-ந்தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை விவாதிக்க கூட்டம் நடக்கிறது. இது சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்றத்திற்கும், தமிழ்நாட்டு நலனுக்கும் எதிரானது. மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படகூடாது. மேகதாது அணை வராமல் இருப்பதற்கு பா.ம.க. எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் 48 மணல் குவாரிகள் இருந்தன. தற்போது 4 மட்டும்தான் உள்ளது. மீண்டும் மணல் குவாரிகளை திறக்கின்ற திட்டம் தமிழக அரசுக்கு இருக்கிறது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். காவிரி ஆறு நம்முடைய தாயை போன்றது. அதனால் ஒருபிடி மணலும் எடுக்கவிடமாட்டோம். அப்படி எடுத்தால் மக்களை திரட்டி போராடுவேன்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி 6 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பா.ம.க. மட்டும் தான் போராடியது. தற்போது, தமிழக அரசு 2 வாரத்திற்குள் நிபுணர்குழு அமைத்து, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என உறுதி கூறியுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதுதான் உண்மையான ஆக்கப்பூர்வமான அரசியல். நாங்கள் எதிரியாக செயல்பட மாட்டோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
தி.மு.க. தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதி ஒன்று நாங்கள் வெற்றி பெற்றால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம். ஓராண்டு காலம் முடிவடைந்து விட்டது. அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடுவார்கள் என்று வெளியிட வேண்டும். தி.மு.க.வின் கொள்கை முடிவைதான் நான் சொல்கிறேன். 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும். அ.தி.மு.க. எண்ணிக்கையில் எதிர்க்கட்சி. ஆனால் செயல்திட்டத்திலும், அரசாங்கத்தை செயல்பட வைத்து வெற்றி பெறுகின்ற கட்சி பா.ம.க. தான், என்று கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.