தமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு!!

27 January 2021, 9:24 pm
TN Andhra Fishermans - Updatenews360
Quick Share

ஆந்திரா : நெல்லூர் அருகே கடலில் தமிழ்நாட்டை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இசக்கப்பள்ளம் கடல் பகுதிக்கு தமிழகத்தை சேர்ந்த சுமார் 180 மீனவர்கள் 15 படகுகளில் இன்று மீன் பிடிப்பதற்காக வந்தனர்.

தமிழக மீனவர்கள் தங்கள் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை பார்த்த ஆந்திர மீனவர்கள் தங்கள் படகுகளில் அவர்களை விரட்டி சென்றனர்.

கடலில் சினிமா பாணியில் தமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் 15 படகுகளுடன் 180 மீனவர்களையும் கரைக்கு அழைத்து வந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார் தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே தமிழக மற்றும் ஆந்திர மீனவர்கள் இடையே பலமுறை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Views: - 0

0

0