ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு : தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அதிமுக எம்எல்ஏ!!

Author: Udayachandran
15 September 2021, 11:23 am
Admk Mla -Updatenews360
Quick Share

கோவை : கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் இன்று துவக்கி வைத்தார்

கோவை சாயிபாபா காலனி வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, சாய்பாபா காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக அந்த அங்கன்வாடி மையத்தை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சாயிபாபா காலனி பகுதி அதிமுக செயலாளர் காலனி கருப்பையா, வார்டு செயலாளர் இளங்கோ,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

Views: - 121

0

0