திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத்.. மணப்பெண் குறித்து வெளிவந்த புதிய தகவல்..!
Author: Mari26 May 2022, 6:36 pm
நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தான் அனிருத். இந்த படத்திற்காக ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே பாடலின் மூலம் உலகளில் மிகவும் பிரபலமானார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து, 10 ஆண்டுகளில் டாப் இசையமைப்பாளர் ஆக வளர்ந்துள்ளார். புல முன்னணி நடிகர்களின் படங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இசை என்றாலே அந்த படத்தில் ஒரு பாடலாவது மாஸ் ஹிட் அடிப்பது கன்ஃபார்ம் என சொல்லும் அளவிற்கு சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று பல வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆம், அனிருத்தின் திருமண வேலை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மணப்பெண் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அனிருத் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2
0