பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!
Author: kavin kumar5 October 2021, 9:45 pm
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. தேர்தல் நடைபெறும் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் ஓட்டுபோடுவதற்கு ஏற்றவாறும், தேர்தல் பணி காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல் ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள இந்த 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
1