‘அண்ணா பல்கலை., துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்க’ : முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!

Author: Babu
12 October 2020, 11:34 am
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை : அரசின் தலையீடு இன்றி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கடிதம் எழுதிய துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- மாநில அரசின்‌ நிதிப்‌ பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால்‌ சமாளிக்க முடியும்‌. ஆகவே உயர்‌ சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்‌” என்று அண்ணா பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ சூரப்பா மத்திய அரசுக்குக்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌. உயர்‌ சிறப்பு அந்தஸ்து அளித்தாலும்‌ மாநில அரசும்‌ நிதியளிக்க வேண்டும்‌ என்கிறது மத்திய அரசு; 69% இட ஒதுக்கீடு குறித்தும்‌ எவ்வித உத்தரவாதமும்‌ அளிக்கவில்லை.

இந்நிலையில்‌ துணை வேந்தர்‌ எப்படி தன்னிச்சையாகக்‌ கடிதம்‌ எழுதுகிறார்‌? அண்ணா பல்கலைக்கழகம்‌, தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும்‌? அதுவும்‌ மாணவர்களுக்கும்‌ பெற்றோர்களுக்கும்‌ சுமையாகவே மாறிவிடும்‌. முதலமைச்சர்‌, உயர்கல்வித்துறை அமைச்சர்‌ உள்ளிட்டோர்‌ நீட்‌ குறித்து பேசுவதாக ஆளுநரைச்‌ சந்தித்ததில்‌ துணை வேந்தரின்‌ இந்த கடிதத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதா?

துணை வேந்தர்‌- முதலமைச்சர்‌ – தமிழக ஆளுநர்‌ ஆகியோர்‌ கூட்டணியாக அண்ணா பல்கலைக்கழகத்தின்‌
உயர்‌ கல்வியை, காவி மயமாக்கிடச்‌ செய்யும்‌ திட்டமிட்ட சூழ்ச்சியா இது? அரசின்‌ உள்நோக்கத்தை அறிந்துதான்‌
பல்கலைக்கழகத்தைப்‌ பிரிக்கும்‌ முடிவினை சட்டமன்றத்தில்‌ தி.மு.க எதிர்த்தது.

முதலமைச்சருக்கு உடந்தை இல்லை எனில்‌ துணை வேந்தரை டிஸ்மிஸ்‌ செய்ய ஆளுநருக்குப்‌ பரிந்துரை செய்ய வேண்டும்‌. இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம்‌ இல்லாமல்‌ உயர்‌ சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்‌ கொள்ள முடியாது என்று பிரதமருக்கும்‌ கடிதம்‌ எழுத வேண்டும்‌. அரசு கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்‌ தி.மு.க இளைஞரணி, மாணவரணி சார்பில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்படும்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 52

0

0