ஓபிஎஸ்-க்கு ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி : ஓபிஎஸ் மனைவியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 1:12 pm
annamalai OPS -Updatenews360
Quick Share

தேனி : முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்த பாஜக தேசிய தலைவர் சிடி ரவி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி சென்னையில் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கொண்டு வரப்பட்டு கடந்த 2ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாள்தோறும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி டி ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம் ஜி ஆகியோர்
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரில் வந்து மறைந்த விஜயலட்சுமி அம்மாளின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவிந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Views: - 260

0

0