பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்: அயன் செய்து வாக்கு சேகரித்த மாநில தலைவர் அண்ணாமலை..!!

Author: Rajesh
13 February 2022, 3:40 pm
Quick Share

கோவை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், அவை குறித்து எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், நீட் தேர்வு சமூகநீதியோடு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, காமராஜபுரத்தில் உள்ள துணி சலவை மற்றும் அயன் கடையில் பாஜக மாநில தலைவர் அயன் செய்து வாக்குகள் சேகரித்தார்.

Views: - 431

0

0