கல்யாணராமன் கைது…விளைவுகள் வேறுமாதிரி இருக்கும்: திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 9:08 am
Quick Share

பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி மாதம் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா…..? இந்தி விவகாரத்தில் திமுகவிற்கு  அண்ணாமலை 'பளார்'!! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online ...

அதில், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த தொடர் போராட்டம் காரணமாக கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இன்னும் ஓயாத பஞ்சாயத்து.. பிடிஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்  எழுதிய அண்ணாமலை | why PTR Palanivel Thiagarajan did not attend GST meeting:  annamalai letter to mk ...

இந்த வழக்கு குறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கல்யாணராமனை ஜாமினில் எடுக்க வழக்கறிஞர்கள் சென்றபோது, 2018ல் போடப்பட்ட எப்ஐஆர் (490), 2019ல் போடப்பட்ட எப்ஐஆர் (336), 2020ல் போடப்பட்ட எப்ஐஆர் (60), (98), (152) என இன்று புதிதாக 5 எப்ஐஆர்-ஐ நீதிபதியிடன் போலீஸார் கொடுத்துள்ளனர். இந்த எப்ஐஆர் கீழ் கல்யாணராமனை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது | TN BJP partyman  Kalyanaraman is Arrested by TN Cyber Crime Police in Airport |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்காது. கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு இப்போதுதான் வெளியே வந்துள்ளார். இந்த வழக்குகள் எல்லாம் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பாக உள்ள வழக்குகள் தான்.

இதுபோன்ற செயலை பாஜக பார்த்துக்கொண்டு இருக்கும் என திமுக ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும். கல்யாணராமனை கைது செய்திருப்பதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. காவல் துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக இருக்கக்கூடாது என்று அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

Views: - 214

0

0