கோபாலபுரம் வீட்டைத் தாண்டி யாருக்கும்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

Author: Hariharasudhan
15 February 2025, 4:51 pm

கோபாலபுரம் வீட்டைத் தாண்டி வெளியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில், ரோட்டரி அமைப்பு சார்பில் மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “பட்ஜெட்டில் நேரடி நிதிப் பகிர்வு மூலம் நிதி வந்துவிடுகிறது. மோடி அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம், நிதிப் பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்திருக்கிறது.

46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேசிய நெடுஞ்சாலை வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எதன் அடிப்படையில் தொடர்ந்து பட்ஜெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. முதலமைச்சருக்குத்தான் இன்றைய நாட்களில் டப்பிங் தேவைப்படுகிறது.

Annamalai on MK Stalin

அவருடைய குரலாக அறிவாலயத்திலிருந்து பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் செய்வதற்காக சந்தானம் தேவைப்படுகிறார். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள், அதுவும் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள்தான். அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர். CAG auditக்கு இந்து அறநிலைத்துறையினர் ஆவணம் சமர்ப்பிப்பதே இல்லை.

எவ்வளவு பணத்தை எடுத்தார்கள், எங்கு எடுத்தார்கள் என்ற கணக்கு யாருக்குமே தெரியாது. மருதமலை கோவிலில் தைப்பூசதன்று, எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று பார்த்தோம். தமிழகத்தில் ஒரு உதவாதத்துறை இருக்கிறது என்றால், அது இந்து அறநிலையத்துறை தான்.

இதையும் படிங்க: என்கிட்ட வேலை பார்த்த பையன் அவன்…இசைஞானி போட்ட நாக் அவுட் பிளான்.!

முதலமைச்சரால் ஒரு ஏர் ஷோ ஒழுங்காக நடத்த முடியவில்லை. இவர், மணிப்பூர் அரசியல் பற்றி பேசுகிறார். பெங்களூரில் நடக்கும் ஏர் ஷோவைச் சென்று பார்த்து வர வேண்டும். தமிழக முதலமைச்சர் அவரின் வேலையைச் சரியாக செய்யாமல், இந்தியாவில் கும்பமேளாவில், அது நடக்கிறது இது நடக்கிறது என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளை ஏன் பேசுவது இல்லை? அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் கொடுமையில் இதுவரை எதுவும் தெரியவில்லை. அவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். கோபாலபுரம் வீட்டைத் தாண்டி வெளியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை” எனத் தெரிவித்தார்.

  • Vijay Vs Sivakarthikeyan விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?