அண்ணாமலை போட்ட மெகா பிளான் : இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 3:58 pm
Annamalai Plan - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி யாருக்கு என இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் ஆனது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமாலை இன்று இரவு டெல்லி செல்கிறார்.

டெல்லியல் மூத்த தலைவர்களை அவர் சந்தித்த பின் இடைத்தேர்தல் தனித்து போட்டியா அல்லது ஆதரவு ஈபிஎஸ்-க்கா, ஓபிஎஸ்-க்கா என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Views: - 373

0

0