ஆளுநர் சட்டப்பேரவையில் இன்று உரையை படிக்காமல் விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இதையும் படியுங்க : அண்ணா பல்கலை,, மாணவி விவகாரம்.. நடிகர் சிவகார்த்திகேயன் கூறிய ‘நச்’ பதில்!
இன்று, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.