முக ஸ்டாலின் ஆளும் தமிழ்நாட்டில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக எதிர்கட்சிகள் பலரும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் விலக்கப்பட்டிருந்தாலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் திமுகவை குறித்தும் அவ்வப்போது தனது விமர்சனங்களை வைத்து வருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் தற்போது அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸ் வாகனத்தில் வைத்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. அது சண்டையாகவும் மாறுகிறது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிக்கொள்கிறார்கள். போலீஸார் அவர்களை தடுக்க முயல்கின்றனர். ஆனாலும் அவர்களை மீறி அவர்கள் செயல்படுகிறார்கள்.
இந்த வீடியோவை பகிர்ந்த அண்ணாமலை, “திமுக அரசிற்கு கீழ் ரவுடிகளின் ஆட்சி. போலீஸாரின் வாகனத்தில் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும்போது ரவுடிகள் போலீஸாரிடம் அத்துமீறுகின்றனர். இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது துளியளவும் பயமில்லை என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே மன வருத்தம் தருகிறது” என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.