பழனி பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு வரவேற்பதற்காக வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாளை பழனிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, பழனி பகுதி பா.ஜ.க. சார்பில் பழனி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பேருந்து நிலைய வேல் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் D-DENGU,M-MALERIA, K-KOSU DMK ஒழிப்போம் என்று திமுவினரை விமர்சனம் செய்து வைக்கபட்ட பேனர் அடையாளம் தெரியாத நபர் கிழிக்கபட்டதால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்பு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர். தொடர்ந்து, பேனரை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், ஒட்டன் சத்திரம் டிஎஸ.பி முருகேசன், தாசில்தார் பழனிசாமி மற்றும் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று பழனியில் தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.