எந்த தமிழ் படமும் படைத்திடாத சாதனையை செய்த ‘அண்ணாத்த’ : படக்குழு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2021, 7:49 pm
annatthe Release -Updatenews360
Quick Share

‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனை புரிந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியான 4ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதைத்தவிர எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை அண்ணாத்த செய்துள்ளது. அதாவது வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது ‘அண்ணாத்த’.

Image

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “வெளிநாடுகளில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்ச திரையரங்குகளை ‘அண்ணாத்த’ பெற்றுள்ளது. 1100-க்கும் மேல் இன்னும்” என ட்விட்டரில் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

Views: - 480

7

1