நிரந்தர பணியாளர்களாக அறிவியுங்கள் : அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

17 May 2021, 2:17 pm
Hospital Private Staffs - Updatenews360
Quick Share

கோவை : அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 9 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தர பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனம் தங்களுக்கு எவ்வித குறையும் வைக்கவில்லை என்றும் தங்களின் உரிமையை தான் முன்வைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அதிகமான வேலைகளை நாங்கள் செய்து வருவதால் எங்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவமனை இருப்பிட முருத்துவர் பொன்மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 87

0

0