சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படும் தேதி அறிவிப்பு!

30 October 2020, 5:42 pm
Padmanaba puram - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வரலாற்று சிறப்பு மிக்க பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட உள்ளதாக அரண்மனை பொறுப்பு அதிகாரி அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த அரண்மனையை தினந்தோறும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி மூடப்பட்டது. 7 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பத்மநாபபுரம் அரண்மனை அடுத்த மாதம் 3-ம் தேதி திறக்கப்பட உள்ளது கேரள அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரண்மனை பொறுப்பு அதிகாரி அஜீத் குமார் கூறுகையில் கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் சுற்றுலா பயணிகள் அரண்மனைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் நாள்தோறும் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

7 மாதங்களுக்கு பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்