பருந்தாகுது ‘ஊர்க்குருவி’: நயன்தாரா தயாரிப்பில் கவினின் அடுத்த படம்…புதிய அறிவிப்பு ரிலீஸ்!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 10:23 am
Quick Share

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூன்றில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார்.

ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி என்னும் படத்தின் அறிவிப்பை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Views: - 797

3

1