சாமியார் மீது மிளகாய் பொடி கரைசல் ஊற்றி அபிஷேகம் : தைப்பூசத்தை முன்னிட்டு விநோத வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2022, 5:12 pm
விழுப்புரம் : செஞ்சி அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகமெங்கும் தைப்பூச விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று வரை கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் இன்று மறுபூஜைக்காக முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
பௌர்ணமியும் தைபூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் தான் தைபூசமாகும்.
இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் ஆகும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியடுத்த தேவதானம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் இன்று அருள்பெரும் ஜோதி சாமியார் தனது மார்பு மீது உரல் வைத்து அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து மாவு ஆகும்வரை இடித்தனர்.
அதனை தொடர்ந்து காய்ந்த மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது. குடம் குடமாக மிளகாய் பொடி கரைசயை பக்தர்கள் சாமியார் மீது ஊற்றினர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மிளகாய் கரைசல் வழிந்தோடியது. இதைப் பார்த்த பக்தர்கள் அரகரோ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
0
0